fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி சமநிலையில்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 18:57

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 1வது டெஸ்ட் போட்டி சமநிலையில்..

இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. கடந்த 11 ம் திகதி ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 308 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதனையடுத்து தமது முதல் இனிங்சை ஆரம்பித்த பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்களுக்கு 252 ஓட்டங்களை பெற்றது. போட்டி ஆரம்பித்த தினத்திலிருந்து மழையால் பாதிப்பு ஏற்பட்டது. முதலாம் நாள் மற்றும் 5 ம் நாள் மாத்திரமே போட்டி முழுமையாக இடம்பெற்றது. அதற்கமைய போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 18ம் திகதி கராய்ச்சியில் இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 18:57

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க