fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கடந்த அரசாங்கம் கைவிட்ட அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பிக்கப்படுமென பிரதமர் உறுதி

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 18:40

கடந்த அரசாங்கம் கைவிட்ட அபிவிருத்தி பணிகள் மீள ஆரம்பிக்கப்படுமென பிரதமர் உறுதி

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவே நிறுத்தப்பட்ட வேலைத்திட்டங்கள் மீள ஆரம்பிக்கப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளும் தற்போது ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதாக தங்காலையில் இடம்பெற்ற சமய வழிபாடுகளின் பின்னர் பிரதமர் குறிப்பிட்டார்.

கைத்தொழிற்பேட்டைகளை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் முதலீடுகளை மேற்கொள்ள தூதரகங்கள் ஊடாக நாம் அழைப்பு விடுத்துள்ளோம். காலமெடுக்காது விரைவாக இந்நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இன்று துறைமுகத்தை விற்பனை செய்துள்ளனர். ஆனால் எமது கொள்கை விற்பது அல்ல. சரியான திட்டமிடலுக்கமைய அமைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் தேவையான காணிகளை வேறு சில தேவைகளக்கு பயன்படுத்தியுள்ளனர். அதனை மீண்டும் நாம் சரிசெய்ய வேண்டும். மேலும் அங்கு மக்களுக்கு அமைக்கப்பட்டுள்ள வீடுகள் வனஜிவராசிகள் திணைக்களத்திற்கு உரித்தான இடங்களில் காணப்படுகின்றன. இவை குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படுமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 18:40

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க