சுகததாச விளையாட்டு மைதான நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 18:56

சுகததாச விளையாட்டு மைதான நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர நடவடிக்கை

சுகததாச விளையாட்டு மைதான நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது. விளையாட்டு மைதான வளாகத்தில் நுளம்ப குடம்பிகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக பிரதான சுகாதார வைத்திய அதிகாரி ருவாண் விஜயமுனி தெரிவித்தார்.

13வது தெற்காசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக நேபாளம் சென்ற இலங்கை வீர, வீராங்கனைகள் சிலர், டெங்கு நோய்க்கு உள்ளாகினர். வீர, வீராங்கனைகள் நேபாளத்திற்கு செல்வதற்கு முன் சுகததாச அரங்கிலேயே தங்கியிருந்தனர். இதனை அடிப்படையாக வைத்து சுகததாச உள்ளக விளையாட்டு தொகுதியை கொழும்பு மாநகர சபையின், பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதேவேளை கொழும்பு நகரத்திலுள்ள விளையாட்டு மைதானங்கள், விளையாட்டு கட்டிட தொகுதிகள், விளையாட்டு சங்க கட்டிடங்கள் உள்ளிட் 23 இடங்கள் கொழும்பு மாநகர சபையினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடிய வகையிலான சூழலைகொண்ட 4 இடங்களுக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி ருவாண் விஜயமுனி தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 15, 2019 18:56

Default