fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மின்சாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 15:18

மின்சாரத்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம்

மின்சக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார். இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான எரிசக்தி அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளிடம் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மின்சக்தி துறையில் எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன் அதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெளிவுபடுத்தியுள்ளார். உரிய ஆய்வுகளுடன் நாட்டிற்கு ஏற்றவகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 15:18

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க