fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அரிசியின் விலையை குறைக்க துரித நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 15:10

அரிசியின் விலையை குறைக்க துரித நடவடிக்கை

வவுனியாவில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள 33 இலட்சம் கிலோ கிராம் நெல்லை அரிசியாக மாற்றுவதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு எவ்வித பற்றாக்குறையும் இன்றி அரிசியை விநியோகிக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய வவுனியா நெற் சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்த நெல் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கடந்த போகத்தில் வவுனியா நெற் சந்தைப்படுத்தும் சபை 33 இலட்சம் கிலோ கிராம் நெல்லை கொள்வனவு செய்தது. நேற்றும் இன்றும் வவுனியா மாவட்ட செயலாளரின் ஆலோசனையின் பேரில் முதல் கட்டத்தின் கீழ் 50 ஆயிரம் கிலோ கிராம் நெல் விநியோகிக்கப்படவுள்ளன.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 15:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க