fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுவிஸ் தூதரக பெண் ஊழியரை மனோவியல் பரிசீலனைக்குட்படுத்த நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 15:01

சுவிஸ் தூதரக பெண் ஊழியரை மனோவியல் பரிசீலனைக்குட்படுத்த நடவடிக்கை

கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற இந்நாட்டின் சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றுகின்ற பெண் ஊழியர் இன்று ஐந்தாவது நாளாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்தார். பின்னர் குறித்த பெண் வைத்திய பரிசோதனைக்கு என தேசிய மனோவியல் சுகாதார நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்படவுள்ளார்.

கடத்தப்பட்டதாக கூறப்படுகின்ற கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ் என்பவர் நேற்றிரவு 7 மணிவரை கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினார். இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு நேற்று மேலதிக அறிக்கையொன்றை சமர்பித்தது.

இதில் அவர்மீது விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தடையை டிசம்பர் 17ம் திகதி வரை நீடிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் ஆஜராகிய அரச சிரேஸ்ட சட்டதரணி ஜனக்க பண்டார கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ் என்பவரின் மனோவியல் நிலைமை தொடர்பான அறிக்கையொன்றை பெற்று கொள்வதற்காக மனநல வைத்திய குழுவிடம் அனுப்பி வைப்பதற்கு அரச சட்ட வைத்திய அதிகாரி பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

இதன் காரணமாக இதுகுறித்த உத்தரவொன்றை பெற்று தருமாறு அரச சிரேஸ்ட சட்டதரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், கடத்தப்பட்டதாக கூறப்படுகின்ற இப்பெண்னின் மனநிலை தொடர்பான அறிக்கையொன்றை பெற்று கொள்வதற்காக ஈடுபடுத்துமாறு உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் கானி பெனிஸ்டர் பிரான்ஸிசிடம் வாக்குமூலத்தை பதவிவு செய்ய தற்போது முடியாதுள்ளதாகவும் அரச சிரேஸ்ட சட்டதரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்போது கானியா சார்பில் ஆஜராகிய சட்டதரணி உபுல் குமாரபெரும, தனது தரப்புவாதிக்கு உடல்நிலை குறைப்பாட்டால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வருகை தந்து வாக்குமூலம் வழங்க முடியாதுள்ளதாக தெரிவித்தார். இதனால் தமது தரப்பினரை சுவிட்சர்லாந்து தூதுவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வாக்குமூலம் பெற்று கொள்வதற்கு இடமளிக்குமாறு சட்டதரணி கோரிக்கை விடுத்தார்.

இதன்போது கொழும்பு பிரதம மஜிஸ்திரேட் லங்கா ஜயரட்ன, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கோ அல்லது அத்திணைக்களத்தின் தலைமையகத்தையோ தவிர, வேறு ஒரு இடத்தில் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து கொள்ளுமாறு உத்தரவொன்றை பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு முடியாது என தெரிவித்தார். அவர் சற்று நோய்வாய்குட்பட்டுள்ளதாக சட்டதரணிகள் நீதிமன்றத்திற்கு தெரிவித்த போதிலும், அப்பெண் பக்கவாதத்தினாலோ அல்லது பாதம் ஒன்று செயலிழந்த நிலையிலோ காணப்படாமையினால் அவருக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்று வாக்குமூலமளிக்க எவ்வித சிரமமும் காணப்படுவதில்லையென மஜிஸ்திரேட் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன் வெளிநாட்டு தூதுவர் ஒருவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் இந்நாட்டின் சட்டத்திற்குட்பட்டுள்ளதா என்பது குறித்து கண்டறியும் போது அதன் சட்ட ரீதியான தன்மையில் மாற்றங்கள் ஏற்பட கூடுமெனவும் மஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். இங்கு நீதிமன்றத்தில் ஊடகங்கள் தொடர்பாக முறைப்பாடு ஒன்றை செய்துள்ள கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸின் சட்டதரணிகள் இச்சம்பவம் குறித்த விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலான கூற்றுக்கள் மற்றும் வழக்கில் ஆஜராகியுள்ள சட்டதரணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கைகள் ஊடகங்கள் ஊடாக மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தனர்.

இதனால் குறித்த வழக்கு தொடர்பாக ஊடகங்களில் ஒளிபரப்படுகின்ற தகவல்கள் தொடர்பாகவும் விசாரணையொன்றை ஆரம்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்குமாறு அவர்கள் நீதிமன்றத்தை கோரினர். குற்ற விசாரணையின் போது அதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவது குறித்தோ, சட்டதுறைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் எவரேனும் நபர் ஒருவர் மேற்கொள்கின்ற கூற்று தொடர்பாக சரியான தகவல்கள் இருந்தால் அவற்றை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு கொழும்பு பிரதம மஜிஸ்திரேட் இதன்போது குறிப்பிட்டார். இச்சம்பவம் குறித்த வழக்கை எதிர்வரும் 17ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதேவேளை கானியா பிரான்ஸிஸ் தொடர்பான மனோவியல் குறித்த அறிக்கையொன்றை பெற்று கொள்வதற்காக குறித்த பெண் இன்றைய தினம் தேசிய மனோவியல் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்படவுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 13, 2019 15:01

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க