இம்மாதம் 26 ம் திகதி சூரிய கிரகணம் ஏற்படவுள்ளது. அதை இலங்கை மக்களுக்கு பார்க்க முடியுமென ஆதர்சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. சூரிய கிரகணம் வடபகுதிக்கு முழுமையாக தென்படும்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி , முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை போன்ற மாவட்டங்களுக்கு சூரிய கிரகணம் முழுமையாக தென்படும். கொழும்பு, கண்டி, கேகாலை, குருநாகல் மாவட்டங்களுக்கு சூரிய கிரகணம் பகுதியளவில் தென்படும். காலை 8.09 முதல் முற்பகல் 11.22 வரை சூரிய கிரகணம் தோன்றும் அதை வெற்றுக்கண்களால் பார்ப்பதை தவிர்க்குமாறு ஆதர்சி கிளார்க் மத்திய நிலையம் வலியுறுத்தியுள்ளது.