fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மனித மேம்பாட்டு குறிகாட்டியில் இலங்கை முன்னிலையில்..

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2019 15:00

மனித மேம்பாட்டு குறிகாட்டியில் இலங்கை முன்னிலையில்..

மனித மேம்பாட்டு குறிகாட்டியில் இலங்கை முன்னோக்கிச் வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கைக்கு அமையவே இம்முன்னேற்றம் பெறப்பட்டுள்ளது.

இதற்கமைய மனித மேம்பாட்டுகுறிகாட்டியில் இலங்கை 5 இடங்கயை தாண்டி முன்னேறியுள்ளது. இதற்கு முன்னர் 76 வது இடத்தில் இருந்த இலங்கை தற்போது 71 வது இடத்திற்கு வந்துள்ளது. 189 நாடுகளின் புள்ளி விபரங்களை அடிப்படையாக வைத்தே இக்குறிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இம்முறை நோர்வே இராச்சியம் முதலிடத்தில் உள்ளது. நைஜர் இராச்சியம் கடைசி இடத்தில் காணப்படுகின்றது. அண்டைய நாடான இந்தியா 129 வதுஇடத்திலேயே உள்ளத.சீனா 85 வது இடத்தில் காணப்படுகின்றது. இந்நாடுகளை தாண்டி மனித மேம்பாட்டு குறிகாட்டியில் இலங்கை முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 10, 2019 15:00

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க