எதிர்வரும் நாட்களில் மழைவீழ்ச்சியில் குறைவு
Related Articles
இலங்கைக்கு தென்கிழக்கு பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மழையுடன் கூடிய வானிலை நிலவுகிறது. இன்றையதினம் நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழைபெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.