பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படுமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
வெட் வரி மற்றும் தேசத்தை கட்டியெழுப்பும் வரி ஆகியவை குறைக்கப்பட்டுள்ளன. அதன் சலுகைகளை மக்களுக்கு வழங்கும் நோக்கில் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. இதற்கமைய பனிஸ் வகைகள் 5 ரூபாவினால் குறைக்கப்படும். ஒருகிலோ கேக் 50 ரூபாவால் குறைக்கப்படுமென பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.