இந்தியாவில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை குயின் எனும் வெப் சீரியலாக உருவாக்கியுள்ளார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்.
இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. 26 நொடிகள் கொண்ட அந்த டீசரில் ஜெயலலிதாவின் பள்ளி பருவம், திரை வாழ்க்கை, அரசியல் என அனைத்தும் இடம் பெற்றது. தற்போது இதன் டிரைலரை கவுதம் மேனன் வெளியிட்டுள்ளார். இந்த ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் 14ம் தேதி குயின் வெப் சீரிஸ் வெளியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.