fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற வானிலை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2019 10:02

சீரற்ற வானிலை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

திருகோணமலை, மட்டக்களப்பு, பதுளை உள்ளிட்ட மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது. நாட்டை சூள மணிக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 11 பிரதேச செயலகப் பிரிவுகளில் பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளது. கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்தையும் கிண்ணியாவையும் இணைக்கும் சிவத்தப்பாலத்தடி வீதியில் போக்குவரத்து செய்ய முடியாமல் மழை நீர் வடிந்தோடுவதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கடும் மழை காரணமாக இப் பகுதியில் உள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் இவ்வீதியில் பயணிப்பவர்கள் அவதானத்துடன் செல்லுமாறும் பொது மக்களை கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடும் மழை காரணமாக வயல் நிலங்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வெள்ள நீர் முழுமையாக வயல் நிலங்களை சேதப்படுத்தியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மழையுடனான காநிலை காரணமாக 17 பிரதான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது 62 வீதம் வரை அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. றங்ரேபே நீர்த்தேக்கத்தின் தாழ் நில பகுதியில் மகாவலி கங்கையைப் பயன்படுத்தும் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்தும் மழையுடன் கூடிய வானிலை நிலவுவதால் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் குறிப்பிட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 5, 2019 10:02

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo