fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நுகர்வுக்கு பொருந்தாத அரிசி குறித்து நாடு பூராகவும் சுற்றி வளைப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 14:43

நுகர்வுக்கு பொருந்தாத அரிசி குறித்து நாடு பூராகவும் சுற்றி வளைப்பு

அநுராதபுர மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியத்தில் காணப்படுகின்ற நாற்பத்தேழரை இலட்சம் கிலோ நெல்லை துரிதமாக அரிசியாக மாற்றப்போவதாக அநுராதபுர மாவட்ட செயலாளர் ஆர்.எம். வன்னிநாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு மாற்றப்படுகின்ற அரிசியை கூட்டுறவு மொத்த விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். பண்டிகை காலத்தில் எவ்வித பற்றாக்குறையும் இன்றி சந்தைக்கு அரிசியை வழங்குவதற்காக அரசாங்கம் வழங்கிய ஆலோசனைக்கு அமைய இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அநுராபுர மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தரமற்ற அரிசி சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்து வருவதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர். வர்ணம் பூசப்படட அரிசி வகைகள் இதில் காணப்படுகின்றன. பூச்சுகள் காணப்படுகின்ற அரிசியும் இவற்றில் அடங்குவதாக அறிவிக்கப்படுகின்றது. இவ்வாறான பாவனைக்கு பொருந்தாத அரிசி தொடர்பாக முறைப்பாடு செய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான அரிசி வகைகள் தொடர்பாக அருகிலுள்ள பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும்.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 14:43

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க