அர்ஜுன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்து வர சட்டரீதியான நடவடிக்கைகள் முன்னெடுப்பு
Related Articles
முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை அயல்நாட்டிடம் ஒப்படைக்கும் சட்டத்தின் கீழ் நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் மூன்று நீதிபதிகள் அடங்கிய நிரந்தர விசேட மேல் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
3 நீதிபதிகள் அடங்கிய விசேட மேல்நீதிமன்றம் அர்ஜூன் மகேந்திரனை கைதுசெய்யுமாறு கடந்த ஆகஸ்ட் மாதம் 9 ம் திகதி உத்தரவிட்டது. இந்நிலையில் குறித்த ஆவணங்கள் மற்றும் கோரிக்கை அந்நாட்டின் சட்டத்திற்கு அமைவானதாக என்பது குறித்து சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களம் பரிட்சித்து வருவதாக மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்கென அவர்கள் இலங்கை சட்டமா அதிபர் திணைக்களத்துடன் மின்னஞ்சல் ஊடாக தகவல் பரிமாறிக்கொள்வதாக மேலதிக சொலிஷிட்டர் விசேட மேல்நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.