13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரனுக்கு வெள்ளிப்பதக்கம்
Related Articles
13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் இலங்கை வீரர் குமார் சண்முகேஷ்வரன் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஹட்டன் வெலிஓயா பகுதியைச் சேர்ந்த இவர் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் கலந்துகொண்டு குறித்த போட்டியை 30 நிமிடங்கள் 49.20 செக்கன்களில் நிறைவு செய்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
குறித்த 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற சன்முகேஷ்வரன் எமது செய்திப்பிரிவுக்கு கருத்து வெளியிட்டார். நான் முதலாம் இடத்தை பெறும் முயற்சியிலேயே ஈடுபட்டேன். எனினும் 2 ஆம் இடத்திலேயே போட்டியை முடிக்க முடிந்தது. தனக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாக குமார் சண்முகேஷ்வரன் தெரிவித்தார்.