fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 13:20

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் விண்ணப்பம் கோரல்

பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசிலுக்காக பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பபட்டுள்ளன. குறித்த புலமைப்பரிசில்கள் கல்விப்பொதுத்தராதர உயர்தரம், பட்டப்படிப்பு கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழிநுட்ப கல்லூரிகளில் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானதென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்த்தானிகர் ஆலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரத்தில் குறைந்ததது 6 திறமை சித்திகளுடன் சித்தியடைந்த மாணவர்கள் அல்லது உயர்தரத்தில் சித்தியடைந்த 25 வயதுக்கு குறைந்தவர்கள் குறித்த புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் , பிறப்புச்சான்றிதழ், கல்விப்பொதுத்தராதர சாதாரண தரம் அல்லது உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம், தோட்ட அத்தியட்சகரிள் அத்தாட்சி ஆகியவற்றின் நிழற்பிரதிகளுடன் இணைத்து அனுப்பவேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்த்தானிகர் ஆலயத்தின் இணையத்தள முகவரிக்கு பிரவேசிப்பதன் ஊடாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும். எதிர்வரும் 27 ம் திகதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ கிடைக்கும் வகையில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டுமென கோரப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 13:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க