fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வலப்பனை கற்குவாரியின் அனுமதிபத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 13:11

வலப்பனை கற்குவாரியின் அனுமதிபத்திரத்தை இரத்து செய்ய நடவடிக்கை

வலப்பனை மண்சரிவுக்கு காரணமென கருதப்படும் கற்குவாரியின் அனுமதிப்பத்திரம் ரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். கற்குவாரியை மூடுமாறு வலியுறுத்தி மலபட்டாவ பகுதி மக்கள் தொடர்ந்து முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தையடுத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் இன்று காலை மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதன்போது தரமான ஆய்வினை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்கும் வரை கற்குவாரியின் செயற்பாடுகளை நிறுத்த தான் கோரிக்கை விடுத்துள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை குறித்த மண்சரிவில் சிக்குண்டு காணாமல்போன மாணவனை தேடும் பணிகள் கடந்த 3 தினங்களாக இடம்பெற்றது. எனினும் மழையினால் மீட்பு பணிக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் குறித்த தேடுதல் நடவடிக்கையினை நிறுத்துமாறு குறித்த மாணவனின் உறவினர்கள் எழுத்துமூலம் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

இதனையடுத்து தேடுதல் நடவடிக்கையினை நிறுத்த தீர்மானித்துள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை வலப்பனை மலபட்டாவ பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மண்ணில் புதையுண்டனர். அவர்களில் தாய், தந்தை மற்றும் 16 வயது பெண் பிள்ளை ஆகியோரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. 15 வயது சிறுவன் மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் மீட்கப்படவில்லை. இந்நிலையில் அனர்த்தம் இடம்பெற்ற மலபட்டாவ கல்வெல பகுதியில் ஆபத்தான இடத்திலிருந்த 11 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் தற்போது இரண்டு விஹாரைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 4, 2019 13:11

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க