கால்பந்தின் மிக உயரிய விருதான பலோன்-டீ-ஓர் (Ballon d’or) விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று (02) பிரான்சில் இடம்பெற்றது. 2019இன் மிகச்சிறந்த வீரருக்கு பரிந்துரைக்கப்பட்ட 30 வீரர்களில் அர்ஜென்டீனா மற்றும் பார்சிலோனா அணிகளின் அணித்தலைவரும் இம்முறை அதிக கோல் அடித்தவருக்கான தங்கப்பாதணியை வென்ற லியோனல் மெஸ்ஸி குறித்த விருதை வென்றார்.
போர்த்துக்கல்லின் அணித் தலைவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, லிவர்பூல் அணியின் பின்கள வீரர் வான் டிஜிக், அவ்வணியின் கோல் காப்பாளர் அலிஸ்சன், முன்கள வீரர் மானே ஆகியோருக்கிடையில் இவ்விருதை பெற்றுக்கொள்வதில் கடும்போட்டி நிலவியது. இறுதியில் லியோனல் மெஸ்ஸி ஆறாவது தடவையாக பலோன்-டீ-ஆர் விருதை தனதாக்கினார். இது வரை எந்த வீரருமே ஆறு தடவைகள் இந்த விருதைப் பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.