fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சீரற்ற வானிலையினால் 4 ஆயிரத்து 153 குடும்பங்களை சேர்ந்தோர் பாதிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 12:49

சீரற்ற வானிலையினால் 4 ஆயிரத்து 153 குடும்பங்களை சேர்ந்தோர் பாதிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக 4 ஆயிரத்து 153 குடும்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வலப்பனை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்குண்டு மூவர் பலியாகியுள்ளனர். மேலுமொருவர் காணாமல்போயுள்ளார். முப்படையினர் மற்றும் பொலிஸார் அப்பகுதியில் தொடர்ந்தும் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

அனர்த்தங்களினால் 5 பேர் காயமடைந்துள்ளனர். 6 வீடுகள் முழுமையாகவும், 859 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகிறது. தற்போது நாடு முழுவதும் 29 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 946 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 149 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டார். இதேவேளை நாட்டில் தற்போது நிலவுகின்ற மழையுடன் கூடிய வானிலை இன்று இரவு முதல் நாளையும் நாளை மறுதினமும் மேலும் அதிகரித்து காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 12:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க