fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 12:37

பூஜித் மற்றும் ஹேமசிறி ஆகியோரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

கட்டாய விடுமுறையிலுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். எதிர்வரும் 17ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் இன்று உத்தரவிட்டார்.

உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலைக்குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி இவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த இருவர் தொடர்பாக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 12:37

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo