fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இம்முறை சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 12:41

இம்முறை சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்காலம் எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் ஆரம்பம்

இம்முறை சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்காலம் எதிர்வரும் 11ம் திகதி பௌர்ணமி தினத்துடன் ஆரம்பமாகிறது. அதற்கமைய பெல்மடுல்ல கல்பொத்தாவெல ரஜமஹா விஹாரையிலுள்ள சுமனசமன் சிலை மற்றும் ஏனைய தேவ ஆபரணங்கள் என்பனவற்றை ஊர்வலமாக எடுத்துச்செல்லும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 10ம் திகதி அதிகாலை குறித்த பூஜை பொருட்கள் மற்றும் சுமனசமான் சிலை சிவனொளிபாதமலை உச்சியில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. இவற்றை எடுத்துச்செல்லும் ஊர்வலங்கள் மூன்று கட்டமாக இடம்பெறவுள்ளன. பெல்மடுல்ல, அவிசாவளை, கரவனெல்ல, கித்துல்கல, கினிகத்தேனை, ஹட்டன், நோர்வூட், மஸ்கெலியா, நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு கட்டமாகவும், இரத்தினபுரி, ஏரத்த வீதியூடாக சிவனொளிபாதமலை வரை ஒரு கட்டமாகவும் பலாங்கொடை, பொகவந்தலாவை, நோர்வூட், மஸ்கெலியா, நல்லதண்ணி ஊடாக மற்றொரு கட்டமாகவும் பெரஹெர ஊர்வலம் இடம்பெறவுள்ளது.

ITN News Editor
By ITN News Editor டிசம்பர் 3, 2019 12:41

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க