மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு 0

🕔13:05, 29.நவ் 2019

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று நிறைவடைகின்றன. புதிய கல்வியாண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இன்றையதினமும் அடுத்த தவணை ஆரம்பிக்க முன்னரும் பாடசாலைகளில் சிரமதான பணிகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. பெற்றோர்களின் பங்களிப்புடன் குறித்த பணிகளை முன்னெடுக்குமாறு

Read Full Article
வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை 0

🕔12:56, 29.நவ் 2019

வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது. நேற்றையதினம் இரு ஏவுகணைகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தென்கொரிய இராணுவம் குற்றம் சுமத்தியுள்ளது. இதேவேளை வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை தொடர்பான தரவுகள் தமது ரேடார் அமைப்பிலும் கண்காணிக்கப்பட்டதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது. எனினும் குறித்த ஏவுகணை தமது வான்பரப்பு அல்லது பொருளாதார வலயத்திற்குள் நுழையவில்லையெனவும் ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.

Read Full Article
ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு நோய் தொடர்பில் எச்சரிக்கை..

ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு நோய் தொடர்பில் எச்சரிக்கை.. 0

🕔12:52, 29.நவ் 2019

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களுக்கு டெங்கு நுளம்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 90 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதிகளவானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று

Read Full Article
நாட்டில் சீரற்ற வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்வுகூறல்

நாட்டில் சீரற்ற வானிலை தொடர்ந்தும் நிலவுமென எதிர்வுகூறல் 0

🕔12:51, 29.நவ் 2019

நாட்டில் சீரற்ற வானிலை தொடர்ந்தும் நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பிற்பகல் வேளையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை பெய்யுமென வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். கரையோர பகுதிகளிலும் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் கொந்தளிப்பு ஏற்படுமென வானிலை அதிகாரி  தெரிவித்தார்.

Read Full Article
புதிய அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் : இந்திய வெளிவிவகார அமைச்சர்

புதிய அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் : இந்திய வெளிவிவகார அமைச்சர் 0

🕔12:47, 29.நவ் 2019

புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களுக்கு இந்திய அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமென இந்திய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் எஸ்.ஜயஷங்கர் தெரிவித்தார். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார். இருநாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவை குறித்த ஜனாதிபதியின் வருகை மேலும் பலப்படுத்தியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். பொருளாதார அபிவிருத்தியை நோக்காக கொண்டு

Read Full Article
80 வகைகளுக்கு மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள் அரச வைத்தியசாலைகயிலிருந்து நீக்கப்பட்டுள்ளன

80 வகைகளுக்கு மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள் அரச வைத்தியசாலைகயிலிருந்து நீக்கப்பட்டுள்ளன 0

🕔10:15, 29.நவ் 2019

80 வகைகளுக்கு மேற்பட்ட தரக்குறைவான மருந்துகள் மற்றும் சத்திரசிகிச்சை பொருட்கள் அரச வைத்தியசாலைகயிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இம்மாதத்தில் மாத்திரம் நான்கு வகையான தரம் குறைந்த மருந்துகளும் சத்திரசிகிச்சை பொருட்களும் நீக்கப்பட்டுள்ளன. இதேவேளை இவ்வாறு நீக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் விநியோகஸ்தர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து கட்டணத்தை மீளப்பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்த்ர சில்வாவின் சேவைக்காலம் நீடிப்பு

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்த்ர சில்வாவின் சேவைக்காலம் நீடிப்பு 0

🕔10:15, 29.நவ் 2019

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்த்ர சில்வாவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த மாதம் ஓய்வுபெறவிருந்தார். இந்நிலையில் இராணுவ தளபதி ஷவேந்த்ர சில்வாவுக்கு 2021ம் ஆண்டு வரை சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏனைய இராணுவ தளபதிகளுக்கு சேவை நீடிப்பு வழங்கப்பட்டதைப்போன்றே தற்போதைய இராணுவ தளபதிக்கும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
மிளகு மற்றும் கறுவா இறக்குமதி விரைவில் தடைசெய்யப்படும் : அரசாங்கம்

மிளகு மற்றும் கறுவா இறக்குமதி விரைவில் தடைசெய்யப்படும் : அரசாங்கம் 0

🕔10:13, 29.நவ் 2019

மிளகு மற்றும் கறுவா இறக்குமதி விரைவில் தடைசெய்யப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு உற்பத்திகளை பலப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் உயர்ந்தபட்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய பொருட்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய எதிர்காலத்தில் தடை விதிக்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
வைகோ கைது

வைகோ கைது 0

🕔16:23, 28.நவ் 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இந்திய விஜயத்தை கண்டித்து டெல்லியில் மதிமுக சார்பில் போராட்டம் நடந்தது. வைகோ தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில், வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

Read Full Article
ஜனாதிபதி 2 நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணம்

ஜனாதிபதி 2 நாள் விஜயத்தை மேற்கொண்டு இந்தியா பயணம் 0

🕔15:22, 28.நவ் 2019

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் இந்தியாவிற்கு பயணமானார். ஜனாதிபதியுடன் 10 பேர்கொண்ட குழு ஒன்றும் பயணமாகியுள்ளது. ஜனாதிபதி தலைமையிலான குழுவினர் இன்று பிற்பகல் 2.05 மணிக்கு ஸ்ரீலங்கன் விமானத்தின் மூலம் இந்தியாவின் புதுடெல்லிக்கு பயணமானார்கள்.

Read Full Article

Default