ரயில்களுக்கு GPS கருவிகளை பொருத்த திட்டம்

ரயில்களுக்கு GPS கருவிகளை பொருத்த திட்டம் 0

🕔10:38, 30.நவ் 2019

ரயில்களுக்கு GPS கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களும் GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவையை செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதும் பாதுகாப்பை அதிகரிப்பதுமே இதன் நோக்கமாகும். குறித்த விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில் சேவைகள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Read Full Article
காட்டு யானை பிரச்சினைக்கு துரிதகதியில் தீர்வு : வனஜீவராசிகள் அமைச்சர்

காட்டு யானை பிரச்சினைக்கு துரிதகதியில் தீர்வு : வனஜீவராசிகள் அமைச்சர் 0

🕔10:36, 30.நவ் 2019

காட்டு யானை பிரச்சினைக்கு துரிதகதியில் தீர்வு வழங்கப்படுமென வனஜீவராசிகள் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க உரிய திட்டங்கள் மேற்கொள்ளப்படும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். குறுகிய கால திட்டமாக மின்வேலி இல்லாத பகுதிகளில் அவற்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன

Read Full Article
50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானம்

50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானம் 0

🕔10:34, 30.நவ் 2019

50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளுக்கு ஆசிரியர் உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவர். ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே திட்டத்தின் நோக்கமாகும். அடுத்த வருடம் சகல பாடசாலைகளுக்கும் ஆரம்ப பிரிவுக்கான ஆசிரியர் உதவியாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுவார்களென அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read Full Article
அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு அறிவித்தல்

அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு அறிவித்தல் 0

🕔10:34, 30.நவ் 2019

அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் பி.டீ.ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு குறித்த விடயத்தை எழுத்துமூலம் அறிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை பதவி விலக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read Full Article
கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி 0

🕔10:33, 30.நவ் 2019

கல்வி பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் பரீட்சார்த்திகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பெயர் மற்றும் பாடவிதானங்கள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படின் 1911 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் திங்கட்கிழமை பரீட்சை ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Read Full Article
இந்திய அரசிடம் இருந்து இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்…

இந்திய அரசிடம் இருந்து இலங்கைக்கு 400 மில்லியன் டொலர்… 0

🕔19:32, 29.நவ் 2019

ஜனாதிபதி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ்.ஜயசங்கருக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதுடில்லி நகரிவ் முற்பகல் இடம்பெற்றது. இந்திய பிரதமரின் அழைப்பின் பேரில் தனது உத்தியோகபூர்வ முதலாவது விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையில் மிக நீண்டகாலமாக காணப்படுகின்ற நட்புறவு இவ்விஜயத்தை

Read Full Article
வடக்கிற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு

வடக்கிற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு 0

🕔13:15, 29.நவ் 2019

வடக்கிற்கான ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது. இன்று காலை முதல் வழமையான நேர அட்டவணைக்கமைய ரயில் சேவைகள் இடம்பெறுகின்றன. இன்று அதிகாலை 5.45க்கு வடக்கிற்கான ரயில் பயணத்தை ஆரம்பித்ததாக புகையிரத கட்டுப்பாட்டறை குறிப்பிட்டுள்ளது. யாழ் தேவி ரயில் அம்பன்பொல ரயில் நிலையத்திற்கு அருகாமையில் தடம்புரண்டது. இதனால் கடந்த இரு நாட்களாக வடக்கிற்கான

Read Full Article
வயம்ப பல்கலைக்கழகத்தில் அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளன

வயம்ப பல்கலைக்கழகத்தில் அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளன 0

🕔13:15, 29.நவ் 2019

வயம்ப பல்கலைக்கழகத்தில் குளியாப்பிட்டிய வளாகத்திலுள்ள அனைத்து பீடங்களும் மூடப்பட்டுள்ளன. விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள் மத்தியில் வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் பீடங்களை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. விடுதியில் தங்கியிருந்த மாணவர்களுக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை வைரஸ் காய்ச்சல் காரணமாக ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாக வயம்ப பல்கலைக்கழக

Read Full Article
கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சிறுமியொருவர் சடலமாக மீட்பு

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சிறுமியொருவர் சடலமாக மீட்பு 0

🕔13:15, 29.நவ் 2019

கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பூண்டுலோயா ஹந்துனுவௌ பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமி கடந்த 27ம் திகதி முதல் காணாமல் போனதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் சிறுமி கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Read Full Article
தொலைபேசிக்கு பதிலாக கோழிக்குஞ்சுகள் : இந்தோனேஷிய அரசின் புதிய முயற்சி

தொலைபேசிக்கு பதிலாக கோழிக்குஞ்சுகள் : இந்தோனேஷிய அரசின் புதிய முயற்சி 0

🕔13:12, 29.நவ் 2019

மாணவர்களின் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த இந்தோனேஷிய அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசிக்கு பதிலாக கோழிக்குஞ்சுகளை வளர்ப்பது தொடர்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அந்நாட்டு அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன. கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்துவதற்கென செலவிடும் நேரத்தை கோழிக் குஞ்சுகளை பராமரிப்பதற்கு செலவிட மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோழிக் குஞ்சுகளை

Read Full Article

Default