Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்குறைப்பு நாளை முதல் அமுலுக்கு..
Related Articles
பொருட்கள் மற்றும் சேவை மீது விதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கு 15 வீத வெட் வரி 8 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது. வரி குறைப்பு நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல வரிகளை ரத்துச்செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரிகளை மறுசீரமைப்புக்கு உட்படுத்தவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்திருந்தார். இதற்கமைய பொருட்கள் மற்றும் சேவை தொடர்பில் அறவிடப்பட்டு வந்த தேசிய கட்டிட வரி, வர்த்தக சேவை கட்டணம், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அறவிடப்படும் வரி, பங்கு சந்தையூடாக அறவிடப்படும் வரி, உழைப்பின் போது அறவிடப்படும் வருமான வரி, உழைப்பின் போது செலுத்தப்படும் வருமான வரி, வட்டி அடிப்படையில் அறவிடப்படும் வைப்பு வரி மற்றும் கடன் சேவைக்கான வரியும் ரத்துச்செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை வருமானம் நிமித்தம் அறவிடப்பட்டு வந்த ஒரு மில்லியன் ரூபாவுக்கான வெட் வரி 25 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கும் தீர்மானமும் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது. நிர்மாணத்துறைக்கென அறவிடப்பட்ட 28 வீத வருமான வரி 14 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொலைத்தொடர்பு வரி 25 வீதத்தாலும் குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பணியாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் நிதி மீதான வருமான வரியும் முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் குடியிருப்பு வீட்டுத்தொகுதி தொடர்பிலும் அறவிடப்பட்ட வெட் வரியும் நாளை முதல் நீக்கப்படுமென நிதியமைச்சு தெரிவித்துள்ளது.