புதையலில் பெற்றதாக கூறி தங்க காசுகளை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது
Related Articles
புதையலில் பெற்றதாக கூறி தங்க காசுகளை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்க காசுகளை 30 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். எனினும் குறித்த தங்க காசுகள் போலியாக தயாரிக்கப்பட்டவையென தெரியவந்துள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து 851 தங்க காசுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.