சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலை மாவட்ட விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன
Related Articles
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மாவட்டத்திலுள்ள சிறு குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் ஏற்படலாமென எமது திருகோணமலை செய்தியாளர் குறிப்பிட்டார்.