fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2019 13:05

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளில் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று நிறைவடைகின்றன. புதிய கல்வியாண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் ஜனவரி மாதம் 2ம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வியமைச்சு அறிவித்துள்ளது. இன்றையதினமும் அடுத்த தவணை ஆரம்பிக்க முன்னரும் பாடசாலைகளில் சிரமதான பணிகளை மேற்கொள்ளுமாறு கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது. பெற்றோர்களின் பங்களிப்புடன் குறித்த பணிகளை முன்னெடுக்குமாறு கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

டெங்கு நுளம்புகளற்ற பாதுகாப்பான சூழலை பாடசாலைகளுக்கு அருகில் முன்னெடுத்து செல்வதே இதன் நோக்கமாகும். இந்நிலையில் பாடசாலைகள், விஞ்ஞான கூடங்கள், ஆசிரியர் கல்லூரிகள், வலய கல்வி காரியாலயங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக டெங்கு ஒழி;பபு வேலைத்திட்டத்தை முன்னெடுக்குமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் ஜனவரி மாதம் இரண்டாம் வாரமளவில் வழங்கப்படுமென கல்வியமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2019 13:05

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க