கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பூண்டுலோயா ஹந்துனுவௌ பகுதியை சேர்ந்த 18 வயது சிறுமி கடந்த 27ம் திகதி முதல் காணாமல் போனதாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் சிறுமி கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸார் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் சடலம் மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிறுமி தற்கொலை செய்துகொண்;டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பூண்டுலோயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.