fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு நோய் தொடர்பில் எச்சரிக்கை..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2019 12:52

ஐந்து மாவட்டங்களுக்கு டெங்கு நோய் தொடர்பில் எச்சரிக்கை..

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களுக்கு டெங்கு நுளம்பு தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் டெங்கு நுளம்பு பரவும் வீதம் அதிகரித்துள்ளதாக டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 90 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் அதிகளவானோர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்நிலையில் தமது சுற்றுப்புற சூழலை தூய்மையாக பேணுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 29, 2019 12:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo