மாணவர்களின் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த இந்தோனேஷிய அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசிக்கு பதிலாக கோழிக்குஞ்சுகளை வளர்ப்பது தொடர்பில் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய அந்நாட்டு அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளன.
கையடக்கத்தொலைபேசியை பயன்படுத்துவதற்கென செலவிடும் நேரத்தை கோழிக் குஞ்சுகளை பராமரிப்பதற்கு செலவிட மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கோழிக் குஞ்சுகளை பராமரிப்பது தொடர்பான நாளாந்த செயற்பாடுகளை அட்டவணைப்படுத்துமாறும் பாடசாலை நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. இதனூடாக கையடக்க தொலைபேசியிலிருந்து விடுபட்ட மாணவர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் வலிமை பெறுவார்களென இந்தோனேஷிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த திட்டத்திற்கு பெற்றோர்கள் மத்தியில் பாரிய வரவேற்பு கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.