ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து விலக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். குறித்த பதவியினை பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தயாராகவுள்ளதாக முன்னாள் பிரதமர் தெரிவித்ததாக மனோ கணேசன் குறிப்பிட்டார். இதுதொடர்பில் நேற்றையதினம் அவருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுதொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் நாளை ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சஜித் பிரேமதாச ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பதவியினையும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமைத்துவத்தையும் ஏற்றுக்கொண்டால் ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைமையினை வழங்கும் தீர்மானமொன்றும் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். இவை குறித்து நாளை முக்கியமாக கலந்துரையாடப்படவுள்ளது.