மாத்தளை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் 15 வருடங்களுக்கு பின் பீட்ரூட் பயிர் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் தமது விளைச்சளுக்கு அதிக பயன் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ கிராம் 150 ரூபாவுக்கும் அதிகமான தொகையில் விற்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மாத்தளை, கலேவல, பல்லேபொல பகுதிகளில் அதிகளவில் பீட்ரூட் பயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டுகின்றது.
அநுராதபுரத்தின் எல்லை கிராமங்களிலும் அதிகளவில் பீட்ரூட் செய்கை மேற்கொள்ளப்பட்டது. தாம் முகங்கொடுத்து வந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் விளைச்சலுக்கு உரிய பலன் கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.