அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் இன்று தமது அமைச்சுக்களில் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.
அமைசச்ர் தினேஷ் குணவர்தன வெளியுறவு அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்றார். மகா சங்கத்தினரின் ஆசிர்வாதத்துடன் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதேநேரம் கைத்தொழில், விநியோக முகாமைத்துவ அமைச்சில் அமைச்சர் விமல் வீரவன்ச தனது கடமைகளை ஆரம்பித்தார். சமய வழிபாடுகளுடன் இடம்பெற்ற நிகழ்வில் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளும்; இதில் கலந்து கொண்டனர்.