fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நிசாந்த டி சில்வா வெளிநாடு சென்றமை தொடர்பாக விசாரணை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 25, 2019 12:56

நிசாந்த டி சில்வா வெளிநாடு சென்றமை தொடர்பாக விசாரணை

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்தடி சில்வா பொலிஸ் தலைமையகத்தின் அனுமதி இன்றி தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றமை தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளர் இன்றைய தினம் கருத்து வெளியிடவுள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்தடி சில்வா கடந்த அரசாங்கத்தின் போது அரசியல் தேவைகளுக்காக சர்ச்சைக்குரிய பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். ஒருதலைபட்சமாக அரசியல் தேவைகளுக்காக இந்த விசாரணைகளை முன்னெடுத்ததாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்தடி சில்வா தனது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் நேற்று பகல் 12.50 அளவில் சுவிஸ் விமான கம்பனிக்கு சொந்தமான டப்ள்யு. கே. 0065 எனும் விமானத்தில் சுவிட்சர்லாந்து நோக்கி பயணமாகியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகரவை தொடர்பு கொண்டு கேட்டபோது பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்காமல் நிஷாந்தடி சில்வா வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட போவதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 25, 2019 12:56

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க