நாட்டை சரியான திசையில் முன்னெடுத்துச் செல்லும் முதல் கட்டத்தில் வெற்றியீட்டியதாக மகா சங்கத்தினர் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு
Related Articles
நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்லவதற்னா பிரதான வெற்றி மக்களினால் முன்னெடுக்கப்பட்டதாக மகா சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பெல்லன்வில ரஜமகா விஹாரை மற்றும் பெபிலியான சுனேத்ரா தேவி பிரிவெனா விஹாரைக்கு சென்று ஆசிர்வாம் பெற்று கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பெல்லன்வில மகா விஹாரைக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விஹாரையின் விஹாராதிபதி கலாநிதி சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரதன தேரர் சந்தித்து ஆசிர்வாhதம் பெற்று கொண்டார். நாரஹேன்பிடிய அபயாராம விஹாரையின் விஹாராதிபதி முருதெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தின் இதன்போது இணைந்திருந்தனர். அவர்கள் பிரித் பராயணம் ஓதி ஜனாதிபதியை ஆசிர்வதித்தனர்.
இதேவேளை ஜனாதிபதி பெபிலியான சுனேத்ராதேவி பிரிவெனா விஹாரைக்கு சென்று பேராசிரியர் சங்கைக்குரிய மெதகொட அபயதிஸ்ஸ தேரரை சந்தித்தார். தேசிய புத்திஜீவிகள் பிக்கு அமைப்பின் தேரர்களும் இதன்போது இணைந்திருந்தனர்.