ஹட்டன் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற தீ விபத்தில் மூன்று கடைகள் தீக்கிரையாகியுள்ளன. எரிவாயு சிலிண்டர் தீப்பற்றியதையடுத்து, அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதில் மூன்று கடைகள் தீப்பற்றி எரிந்ததில், ஒரு கடை முற்றாக அழிந்ததுடன், ஏனைய 2 கடைகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.