மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகளுக்கு எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தடை
Related Articles
க.பொ.த சாதாரண தரபரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள் கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் அனைத்தும் எதிர்வரும் புதன்கிழமை நள்ளிரவுடன் தடைசெய்யப்படுகின்றன.
குறித்த விதிமுறையை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவித்துள்ளார். இதுதொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் பொலிஸாருக்கோ அல்லது 1911 எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பை ஏற்படுத்தி அறிவிக்கமுடியும்.