3வது தடவையாகவும் பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவுக்கு வெளிநாட்டு தலைவர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்காக இலங்கையின் புதிய பிரதமருடன் நெருங்கி செயற்பட எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் இலங்கையின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான வரலாற்று நட்புறவையும் புரிந்துணர்வையும் மென்மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி வெற்றிகரமான பதவி காலத்திற்கு பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார். அத்துடன் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்திக்கொண்டு இலங்கை பிரதமருடன் நெருங்கி செயற்படுவதற்கு உத்தேசித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாலைதீவின் சபாநாயகர் மொஹமட்; நஷீடும் இலங்கை பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமருடன் மீண்டும் இணைந்து செற்படுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.