14வது தொலைகாட்சி அரச விருது வழங்கும் விழாவில் ஐரீஎன் ஊடக வலையமைப்பு பல விருதுகளை தட்டிக்கொண்டது. கொழும்பு தாமரை தடாக அரங்கில் நேற்றிரவு இந்நிகழ்வு கோலாகலமாக இடம்பெற்றது.
2018ம் ஆண்டில் ஒளிபரப்பாகிய தொலைகாட்சி படைப்புக்களுக்காகவே இவ்விருது வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. முதல் கட்டத்தின் கீழ் 17 பிரிவுகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த படைப்புக்களுக்கான விருதுகளுக்கு என ஐரீஎன் ஊடக வலையமைப்பின் இந்திரசிறி சுரவீர டில்ஷான் பத்திரட்ன மற்றும் சித்தாரா கலு ஆராச்சி ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் சித்தாரா கலுஆராச்சி விருதை தட்டிக்கொண்டார்.
ஆங்கில மொழிமூல சிறந்த செய்தி வாசிப்பாளருக்கான விருதை இப்தியா அப்துல் காதர் பெற்று கொண்டார்.
வசந்தம் ரிவியில் ஒளிபரப்பாகிய சேவ் த சில்ரன் என்ற சிறந்த இடைநிரப்பு தொலைகாட்சி நிகழ்ச்சிக்கான விருதை தக்ஷலாந்த் பெற்று கொண்டார்.
ஐரீஎன்னுக்காக ஜனஜீவ வேஹெல்ல தயாரித்த நிகழ்ச்சி எத் பவ்ர நிகழ்ச்சி ஜீரியின் விசேட விருதை பெற்று கொண்டது.
ஊடக மொழிமூல சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான விருதை வசந்தம் ரீவியின் கே.புண்ணியமூர்த்தி தட்டிக்கொண்டார்.
சிங்கள மொழிமூலமான சிறந்த விவரண நிகழ்ச்சிக்குரிய விருதை ஐரீஎன் ஊடக வலையமைப்பின் சமன்சிறி அமரதுங்க பெற்று கொண்டார். அது அவர் தயாரித்த ச்சீவரய எனும் நிகழ்ச்சிக்கே கிடைத்தது.
சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான பரிந்துரைக்கப்பட்டிருந்த 3 பெயர்களுக்குமாக ஐரீஎன் ஊடக வலையமைப்பின் சந்தன அல்மேதா பரிந்துரை செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். இதற்கு அமைய சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்கான விருதை சந்தன அல்மேதா தயாரித்து வழங்கிய பல்சர் எட்வென்சர் நிகழ்ச்சி தட்டிக்கொண்டது.
தமிழ் மொழிமூல சிறந்த மல்டி கமரா தயாரிப்புக்கான விருதை வசந்தம் ரிவி கோணேஷ் செல்வராஜா பெற்று கொண்டார். என்டர் பிரைஸஸ் ஸ்ரீலங்கா நிகழ்வை வழங்கியமைக்காகவே இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டது.