fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொலைக்காட்சி அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 15:16

தொலைக்காட்சி அரச விருது வழங்கும் நிகழ்வு இன்று மாலை..

தொலைக்காட்சி அரச விருது வழங்கும் நிகழ்வு தாமரை கோபுர அரங்கில் மிக கோலாகலமாக இன்று மாலை நடைபெறவுள்ளது. சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் பல நிகழ்ச்சிகள் இவ்விருது வழங்கும் விழாவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சின் வழிகாட்டலுடன் கலாசார திணைக்களமும் இலங்கை கலைச்சபையும் இணைந்து இவ்விருது வழங்கும் விழாவை ஒழுங்கு செய்துள்ளது. பிரபல நடிகை மாலனி பொன்சேகாவின் தலைமையில் தொலைக்காட்சி அரச விருது வழங்கும் விழாவை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

இவ்விருது வழங்கும் விழாவில் சிறந்த துப்பரியும் செய்திக்காக சுயாதீன தொலைக்காட்சி செய்தி பிரிவின் க யான் புத்திக எல்லேகொட பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சிறந்த விளையாட்டு நிகழ்ச்சிக்காக சந்தன அல்மேதா பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் சிறந்த இசை நிகழ்ச்சிக்காக உதயகுமார தென்ன கோன் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் .சிறந்த சிறுவர் நிகழ்ச்சிக்காக லக்ஷ்மன் மத்துமகலவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுயாதீன தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக எத்பவ்ர நிகழ்ச்சிக்காக ஜனஜீவ வேஹல்ல விருதுக்காக பரிந்’துரை செய்யப்பட்ட பெயர்களில் அடங்குகின்றார். சிறந்த ஆங்கில செய்தி வாசிப்பாளருக்காக இப்தியா அப்துல்காதர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்திரசிறி சுரவீரவும் விருதுக்கான பரிந்துரைகளில் அடங்குகின்றார். வசந்தம் தொலைக்காட்சியிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் விருதுக்கென பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 15:16

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க