fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புதிய பிரதமராக இன்று சத்தியப்பிரமாணம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 09:34

மகிந்த ராஜபக்ஷ அவர்கள் புதிய பிரதமராக இன்று சத்தியப்பிரமாணம்

எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மகிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

மகிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்;டதன் பின்னர் பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளார். அவர் மூன்றாவது தடவையாக பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். புதிய பிரதமர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் எதிர்கட்சி தலைவராகவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் மகிந்த ராஜபக்ஷ தாயகத்திற்கு பாரிய சேவையாற்றிய ஒரு தலைவராவார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 21, 2019 09:34

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க