fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஈரானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 106 பேர் பலி

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 13:07

ஈரானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 106 பேர் பலி

ஈரானில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 106 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு மனித உரிமை அமைப்பொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த 15ம் திகதி ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்தே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மோதல் நிலை ஏற்பட்டது. பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். 106 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் ஈரான் அரசாங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 20, 2019 13:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க