அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2019 13:31

அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

அதிக விலைக்கு கோதுமை மாவை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது. இது குறித்து சகல அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.

அதிகாரசபையின் உத்தியோகபூர்வ அனுமதியின்றி விலை அதிகரிப்பை மேற்கொள்வது சட்டவிரோதமானதாகும். அதற்கமைய உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை விலை அதிகரிப்பு தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 19, 2019 13:31

Default