ஆயிரத்து 620 கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நீர்கொழும்பை அண்மித்த கரையோர பகுதியில் மேற்கு கடற்படை பிரிவினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். கு
றித்த பகுதியிலிருந்து பீடி இலைகள் மறைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த 54 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் பயணித்த டோலர் படகும் பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.