பிரித்தானிய இளவரசர் சாள்ர்ஸ் நியுசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இளவரசருடன் அவரது மனைவி காமிலாவும் சுற்றுப்பயணத்தில் இணைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒருவார காலம் அவர்கள் அந்நாட்டில் தங்கியுள்ளனர்.
ஒக்லெண்டிலுள்ள விமானப்படைத்தளத்தில் அவர்களுக்கு மகத்தான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. நியுசிலாந்தின் கிரிஸ்சேர்ச் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அவர்கள் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.