fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 – 20 தொடர் ஆப்கானிஸ்தான் வசம்

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2019 12:33

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 – 20 தொடர்  ஆப்கானிஸ்தான் வசம்

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 வதும் இறுதியுமான 20 – 20 போட்டியில் ஆப்கானிஸ்தான் 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. அதற்கமைய 3 போட்டிகளை கொண்ட 20 – 20 தொடர் இரண்டுக்கு 0 என்ற அடிப்படையில் ஆப்கானிஸ்தான் வசமாகியுள்ளது.

லக்னோ மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றது. ரஹ்மனுள்ளா குர்பாஸ் 79 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் செல்டோர்ன் கொட்ரெல், கெஸ்ரிக் வில்லியம்ஸ், கிமோபோல் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர். 157 எனும் ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு தொடர்ந்தும் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

அதற்கமைய ஆப்கானிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றியை தனதாக்கியது. போட்டியின் ஆட்டநாயகனாக ரஹ்மனுள்ளா தெரிவானார். போட்டி தொடர் நாயகனாக கரீம் ஜெனட் தெரிவானார். ஏற்கனவே இரு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒரு நாள் தொடரை மேற்கிந்திய தீவுகள் அணி முழுமையாக கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி எதிர்வரும் 27 ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2019 12:33

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க