தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் எந்தவித பாரிய வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2019 10:10

தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் எந்தவித பாரிய வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னரான காலப்பகுதியில் எந்தவித பாரிய வன்முறைச் சம்பவங்களும் பதிவாகவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்த காலப்பகுதியில் இருந்து தேர்தல் நிறைவு பெறும் வரையிலும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் எந்தவித பாரிய வன்முறை சம்பவங்களும் பதிவாகவில்லை என அவர் குறிப்பிட்டார். நாட்டில் தொடர்ந்தும் அமைதியான சூழல் காணப்படுவதாகவும் பாதுகாப்பை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 18, 2019 10:10

Default