புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்து..

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 17, 2019 17:04

புதிய ஜனாதிபதிக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்து..

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ள கோட்டாப்ய ராஜபக்ஷவுக்கு இந்திய பிரமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டு மக்களிடையே நெருக்கமான மற்றும் சகோதரத்துவ உறவுகளை ஆழப்படுத்துவதற்கும், பிராந்தியத்தின் அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் நெருக்கமாக பணியாற்ற தான் எதிர்பார்த்துள்ளதாக அவர் டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

0000

ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியுள்ள கோட்டாப்ய ராஜபக்ஷவுக்கு சர்வதேச தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட், கோட்டாப்ய ராஜபக்ஷவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். புதிய நிர்வாகத்துட்ன இணைந்து பணியாற்ற தான் விரும்புவதாகவும் மாலைத்தீவு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

0000

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு பாகிஸ்தான் அரசாங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அவரின் தலைமையின் கீழ் இலங்கை ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் பயணிக்குமென எதிர்பார்ப்பதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையிலான உறவை மேலும் சக்திப்படுத்த புதிய ஜனாதிபதியுடனும் அவரது குழுவினருடனும் இணைந்து செயற்பட பாகிஸ்தான் தலைவர் எதிர்பார்த்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor நவம்பர் 17, 2019 17:04

Default