அதிவேக நெடுஞ்சாலைகளில் நாளை முதல் பஸ் கட்டணம் குறைக்கப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 10 ரூபா மற்றும் 20 ரூபாவால் கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலைகளில் அறவிடப்படும் கட்டணத்தை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த சலுகையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் போக்குவரத்து கட்டண குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கு போக்குவரத்து அமைச்சர் அர்ஜீன ரணதுங்கவின் அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது.