அவுஸ்திரேலிய காட்டுத்தீ இன்னும் 3 வாரங்களுக்கு நீடிக்கலாமென அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் கடந்த ஒரு வாரமாக காட்டுத்தீ பரவி வருகிறது.
இதனால் சுமார் 2.5 மில்லியன் ஏக்கர் விவசாய நிலப்பரப்பு அழிவடைந்துள்ளது. இந்நிலையில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.